முகப்பு
இந்தியா

அசாம் அமைச்சர் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

அசாம் மாநில அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான ஹிமந்தா பிஸ்வா சர்மா ஜலுக்பாரி தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். 

Updated On : 2 மே, 2021 at 5:46 PM
ஹிமந்தா பிஸ்வா சர்மா
பகிர்:

அசாம் அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான ஹிமந்தா பிஸ்வா சர்மா ஜலுக்பாரி தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.

இவர் காங்கிரஸின் ரோமன் சந்திர போர்த்தாகூர் என்பவரை 1,01,911 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

இதையடுத்து ஹிமந்தா பிஸ்வா சர்மா தொடர்ந்து 5 ஆவது முறையாக ஜலுக்பாரி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

Advertisement

தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். 

2016 தேர்தலில் ஹிமாந்தா பிஸ்வா சர்மா ஜலுக்பாரி தொகுதியில் 85,935 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.