மேற்கு வங்கம்: கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி (திரிணமூல்) வெற்றி
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி, ஷிப்பூர் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி, ஷிப்பூர் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.
இவர் பாஜக வேட்பாளர் ரத்தீன் சக்ரவர்த்தியை 32,339 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.
இன்று பிற்பகல் 3 மணி நிலவரப்படி மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 பேரவைத் தொகுதிகளில் திரிணமூல் காங்கிரஸ் 206 இடங்களில் முன்னிலையில் இருந்து வருகிறது.
பாஜக 83 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒரு இடத்திலும், பிற கட்சிகள் 2 இடத்திலும் முன்னிலையில் உள்ளன.