முகப்பு
இந்தியா

பினராயி விஜயன் -49,000, கே.கே. ஷைலஜா- 61,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

கேரள முதல்வர் பினராயி விஜயன் 49,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்து வருகிறார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:08 PM
முதல்வர் பினராயி விஜயன் (கோப்புப்படம்)
பகிர்:

கேரள மாநிலம் தர்மடம் சட்டப்பேரவைத் தொகுதியில்  முதல்வர் பினராயி விஜயன் 49,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்து வருகிறார். 

அதேபோன்று கேரள சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா மட்டனூர் தொகுதியில் 61,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்து வருகிறார். 

கேரளத்தில் மொத்தமுள்ள 140 தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி 93 இடங்களிலும், காங்கிரஸ் 43 இடங்களிலும், பிற கட்சிகள் 4 இடங்களிலும் முன்னிலையில் இருந்து வருகிறது. பாஜக ஒரு இடத்தில் கூட முன்னிலையில் இல்லை. 

முழு கட்டுரையைப் படிக்க →