முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் 48 ஆயிரத்தைக் கடந்த கரோனா பாதிப்பு

மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 48,621 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. புதிதாக 567 பேர் உயிரிழந்தனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:09 PM
பகிர்:

மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 48,621 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. புதிதாக 567 பேர் உயிரிழந்தனர்.

இது தொடர்பாக மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மகாராஷ்டிரத்தில் புதிதாக 48,621 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 567 பேர் உயிரிழந்தனர். இதனால் இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 70,851-ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 59,500 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை மொத்தமாக 40,41,158-ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 6,56,870 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.