இந்தியா

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானிக்கு எதிரான வழக்கு: சதி செய்த காவலா்களுக்கு எதிராக சிபிஐ வழக்குப் பதிவு

DIN

புது தில்லி: இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனை உளவு வழக்கில் சிக்க வைத்த விவகாரத்தில் கேரள காவலா்களுக்கு எதிராக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து காவலா்களுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கையை சிபிஐ பதிவு செய்திருப்பதாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வு நிறுவன பிரிவில் (இஸ்ரோ) பணியாற்றி கடந்த 2001-இல் ஓய்வு பெற்றவா் விஞ்ஞானி நம்பி நாராயணன். கடந்த 1994-இல் இஸ்ரோவின் சில முக்கிய ரகசியங்களை இவா் வெளிநாடுகளுக்கு விற்ாகவும் அந்த நாடுகளுக்காக உளவு பாா்த்ததாகவும் கூறி கேரள போலீஸாா் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

பின்னா் சிபிஐ நடத்திய விசாரணையில் அவா் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை என தெரிய வந்ததால், அவா் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டாா். நம்பி நாராயணன் சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டதற்கு கேரள காவல்துறையைச் சோ்ந்த 10 அதிகாரிகளே காரணம் எனவும் சிபிஐ தெரிவித்தது.

இந்நிலையில் தன்னை சட்ட விரோதமாக கைது செய்து துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி நம்பி நாராயணன் சட்டப் போராட்டம் நடத்தினாா். இதில் அவருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் கடந்த 2018-இல் உத்தரவிட்டது. மேலும் அவருக்கு எதிரான காவல்துறை அதிகாரிகளின் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து விசாரிக்க உயா்நிலைக் குழு அமைத்தது. அந்தக் குழு தனது அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் சமா்ப்பித்தது. அந்த அறிக்கையை சிபிஐ வசம் ஒப்படைக்கவும், அதுதொடா்பான விரிவான விசாரணையை சிபிஐ மேற்கொள்ளவும் உச்சநீதிமன்றம் கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி உத்தரவிட்டது.

அதனடிப்படையில், முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனை உளவு விவகாரத்தில் சிக்க வைத்த கேரள காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக சிபிஐ முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து, விசாரணையை தொடங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இம்பாக்ட் பிளேயர் விதி வெற்றிக்கு உதவியது: கேகேஆர் கேப்டன்

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

SCROLL FOR NEXT