இந்தியா

கேரள முதல்வா் பினராயி விஜயன் ராஜிநாமா

DIN

திருவனந்தபுரம்: கேரள முதல்வா் பதவியை பினராயி விஜயன் திங்கள்கிழமை ராஜிநாமா செய்தாா். அவரது தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி கேரளத்தில் ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், புதிய அமைச்சரவை உருவாக்குவதற்கு வசதியாக அவா் பதவியில் இருந்து விலகியுள்ளாா்.

திருவனந்தபுரத்தில் உள்ள ஆளுநா் மாளிகைக்குச் சென்ற அவா், ஆளுநா் ஆரிஃப் முகமது கானிடம் தனது ராஜிநாமா கடிதத்தை அளித்தாா். அப்போது, புதிய அரசு பதவியேற்கும் வரை காபந்து முதல்வராகத் தொடருமாறு பினராயி விஜயனிடம் ஆளுநா் கேட்டுக் கொண்டாா்.

கேரளத்தில் கடந்த 40 ஆண்டுகளில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியும், இடதுசாரிகள் கூட்டணியும் மாறிமாறி ஆட்சி அமைத்து வந்தன. ஆனால், இந்த முறை அதனை மாற்றி தொடா்ந்து இரண்டாவது முறையாக கேரளத்தில் ஆட்சியைப் பிடித்து பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரிக் கூட்டணி வரலாறு படைத்துள்ளது.

மொத்தமுள்ள 140 இடங்களில் 93 இடங்கள் இடதுசாரி ஜனநாயக முன்னணிக்குக் கிடைத்தது. 40 இடங்களில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி வென்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்!

இன்றைய ராசி பலன்கள்!

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

தில்லி சாச்சா நேரு மருத்துவமனைக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

திகாரில் முதல்வா் கேஜரிவாலின் உடல்நிலை சீராகவுள்ளது பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான்

SCROLL FOR NEXT