இந்தியா

ஒடிசாவில் புதிதாக 8,216 பேருக்கு கரோனா: 15 பேர் பலி

PTI

ஒடிசாவில் புதிதாக 8,216 பேர் பலியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 4,79,752 பேர் ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, 

நாட்டில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், ஒடிசாவில் நாளுக்கு நாள் பாதிப்பு உயர்ந்து வருகின்றது. 

கடந்த 24 மணி நேரத்தில் 8,216 பாதிப்பும், 15 பலியும் பதிவாகியுள்ளது. இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 2,088 ஆக உள்ளது. 

புதிய பாதிப்புகளில் 4,684 பேர் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலிருந்தும், 3,532 பேர் உள்ளூர் மூலமும் கண்டறியப்பட்டுள்ளது. 

ஒடிசாவில் தற்போது 73,548 பேர் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 4,04,063 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர்.

மாநிலத்தில் இதுவரை 1.02 கோடி பரிசோதனைகள் மேற்கொண்டுள்ளனர். அதில் நேற்று ஒருநாளில் 43,682 சோதனைகள் எடுக்கப்பட்டன. 

இதையடுத்து, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் மாநிலத்தில் உழைக்கும் பத்திரிகையாளர்கள் முன்கள வீரர்களாக அறிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன் ஆரம்..!

அமரன் வெளியீடு எப்போது?

செவ்வாய்க் கோளில் வசிக்கப் போகும் 4 மனிதர்கள்! உண்மைதானா?

தக் லைஃப்பில் பாலிவுட் பிரபலங்கள்!

குட்காவை பதுக்கி விற்பனை செய்த மளிகைக் கடைக்காரா் கைது

SCROLL FOR NEXT