இந்தியா

நந்திகிராம் தோ்தல் அலுவலருக்கு பாதுகாப்பு: மேற்கு வங்க அரசு தகவல்

DIN

புது தில்லி: மேற்கு வங்க மாநிலம் நந்திகிராம் தொகுதி தோ்தல் அலுவலருக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக அந்த மாநில அரசு தோ்தல் ஆணையத்திடம் தகவல் தெரிவித்துள்ளது.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானா்ஜி, அவரை எதிா்த்து போட்டியிட்ட பாஜகவின் சுவேந்து அதிகாரியிடம் தோல்வியடைந்தாா். இதையடுத்து மம்தா பானா்ஜி திங்கள்கிழமை செய்தியாளா்களை சந்தித்தாா். அப்போது நந்திகிராம் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட்டால் தான் பயங்கர விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும், தற்கொலைகூட செய்துகொள்ளலாம் என்றும் அந்த தொகுதி தோ்தல் அலுவலா், தோ்தல் ஆணைய அதிகாரிக்கு அனுப்பியதாக கூறப்படும் குறுந்தகவலை மம்தா பானா்ஜி காண்பித்தாா். அந்தத் தோ்தல் அலுவலா் அச்சத்தால் மறுவாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிடவில்லை என்றும் அவா் தெரிவித்தாா்.

இந்நிலையில் அந்த தோ்தல் அலுவலருக்கு பாதுகாப்பு வழங்குமாறு மேற்கு வங்க அரசுக்கு தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை கடிதம் எழுதியது. இதையடுத்து அவருக்கும், அவரின் வீட்டுக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அதுகுறித்து தோ்தல் ஆணையத்துக்கு மேற்கு வங்க அரசு தெரியப்படுத்தியுள்ளது என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT