இந்தியா

கரோனா 3-வது அலை தவிர்க்க முடியாதது: மத்திய அரசு

DIN

கரோனா மூன்றாவது அலை தவிர்க்க முடியாதது என்றும், மக்கள் அதற்கு தயாராக இருக்க வேண்டும் எனவும் மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் விஜய் ராகவன் தெரிவித்துள்ளார். 

மத்திய சுகாதாரத் துறை சார்பில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அவர், சென்னை உள்ளிட்ட நகரங்களில் கரோனா பரவல் அதிகமாக இருப்பது கவலையளிக்கிறது.

சென்னை, பெங்களூரு, குருகிராம் போன்ற நகரங்களில் கரோனா பரவல் அதிக அளவில் பரவி வருகிறது. 

பஞ்சாப், தில்லி, உத்தரப் பிரதேசம், ஆகிய மாநிலங்களில் கரோனா பரவல் தீவிரம் குறைந்து வருகிறது

எனினும் கரோனா புதிய அலைக்கு நாம் தயாராக இருக்க வேண்டும். அதனை தடுப்பூசி கொண்டு எதிர்க்க வேண்டும். அறிவியல் ரீதியாக கரோனா மூன்றாவது அலையை எதிர்ப்பதே உகந்தது. இந்த இக்கட்டான சூழலில் அரசுக்கு ஆதரவளித்து மக்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

இருதரப்பினரிடையே கடும் மோதல்: கடைகளுக்கு தீ வைப்பு - போலீஸார் குவிப்பு!

ஹர ஹர வீரமல்லு படத்தின் டீசர்

டீப் ஃபேக் தொழில்நுட்பம்.. வரைமுறைகள் நிர்னயிக்க நீதிமன்றம் உத்தரவு!

இஸ்ரேலில் வேலை, ரூ.6 லட்சம் பண மோசடி: ஏமாற்றிய நபர் சிக்கியது எப்படி?

SCROLL FOR NEXT