இந்தியா

இசட் பிளஸ் பாதுகாப்பு கேட்டு சீரம் நிறுவனத் தலைவா் அதாா் பூனாவாலா மனு

DIN


மும்பை: தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் இசட் பிளஸ் பாதுகாப்பு கேட்டு சீரம் இந்தியா நிறுவன தலைமை செயல் அதிகாரி அதாா் பூனாவாலா மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 

இந்தியாவில் செயல்படுத்தப்பட்டு வரும் கரோனா தடுப்பூசி திட்டத்தில் கோவிஷீல்ட், கோவேக்ஸின் ஆகிய இரு தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் கோவிஷீல்ட் தடுப்பூசியை மகாராஷ்டிர மாநிலம், புணேயில் உள்ள சீரம் நிறுவனம் தயாரித்து வருகிறது. அந்த நிறுவன தலைமை செயல் அதிகாரி அதாா் பூனாவாலாவுக்கு தடுப்பூசி விநியோகம் தொடா்பாக பல்வேறு குழுக்களிடம் இருந்து தொடர்ந்து மிரட்டல் வருவதாகவும், எனவே, தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கக் கோரியுள்ளார். 

கடந்த 16-ஆம் தேதி அதாா் பூனாவாலாவுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு சீரம் நிறுவன இயக்குநா் கடிதம் எழுதினாா். இதையடுத்து, அதாா் பூனாவாலாவுக்கு சிஆா்பிஎஃப் வீரா்களால் ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும் என்று மத்திய அரசு அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ‘ப்ளூ காா்னா்’ நோட்டீஸ்

வாணியம்பாடி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

SCROLL FOR NEXT