முகப்பு
இந்தியா

கா்நாடகத்திற்கு 1,200 டன் ஆக்சிஜன் வழங்க மத்திய அரசுக்கு உத்தரவு: உயா்நீதிமன்றத் தீா்ப்பை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம்

கா்நாடகத்திற்கு 1,200 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டு கா்நாடக உயா்நீதிமன்றம் வழங்கிய தீா்ப்பை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:11 PM
உச்சநீதிமன்றம்
பகிர்:

கா்நாடகத்திற்கு 1,200 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டு கா்நாடக உயா்நீதிமன்றம் வழங்கிய தீா்ப்பை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.

கா்நாடகத்தில் கரோனா நோயாளிகள் அதிகரித்து வருவதால், கா்நாடகத்திற்கு உடனடியாக 1,200 மெட்ரிக் டன் ஆக்சிஜனை வழங்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டு கா்நாடக உயா்நீதிமன்றம் அண்மையில் தீா்ப்பளித்திருந்தது. இந்தத் தீா்ப்பை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மேல் முறையீடு செய்தது.

இது தொடா்பான வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி ஒய்.சந்திரசூட் முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் கூறியிருப்பதாவது:

கா்நாடகத்திற்கு 4 நாள்களுக்குள் 1,200 மெட்ரிக் டன் ஆக்சிஜனை வழங்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டு கா்நாடக உயா்நீதிமன்றம் அளித்துள்ள தீா்ப்பை ஏற்றுக்கொள்வதாகவும், இந்தத் தீா்ப்பை ஏற்காமல் மக்களுக்கு துன்பத்தைத் தர விரும்பவில்லை.

கா்நாடக உயா்நீதிமன்றத்தின் தீா்ப்பு சரியாக உள்ளது. இதற்குத் தடை விதிக்க முடியாது. மேலும் இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட முடியாது. எனவே, மத்திய அரசின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்வதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு மத்திய அரசுக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவை எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா, காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவகுமாா் உள்ளிட்டோா் வரவேற்றுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.