இந்தியா

அசாம் முதல்வராக ஹிமந்தா பிஸ்வா சர்மா பதவியேற்பு

ANI


அசாமின் 15-வது முதல்வராக ஹிமந்தா பிஸ்வா சர்மா இன்று நண்பகல் 12 மணிக்கு பதவியேற்றார். 

மாநில ஆளுநர் ஜெகதீஷ் முகி முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி நட்டா மற்றும் பிற தலைவர்கள் கலந்துகொண்டனர். 

ஹிமாந்தா பிஸ்வா சர்மா, சர்பானந்த சோனாவால் இருவருமே முதல்வர் பதவிக்குத் தகுதியானவர்கள் என்பதால், இருவரில் யாரை முதல்வராகத் தேர்ந்தெடுப்பது என்பது குறித்து தில்லியில் நேற்று பாஜக மேலிடம் ஆலோசனை நடத்தியது.

அதன்பின்னர் குவஹாத்தியில் நடைபெற்ற சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் சட்டப்பேரவை கட்சித் தலைவராக ஹிமாந்தா தேர்ந்தெடுக்கப்பட்டார். 

முன்னதாக முதல்வர் பதவியிலிருந்து சர்பானந்த சோனாவால் ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநருக்கு அவர் அனுப்பி வைத்தார்.

இதனைத்தொடர்ந்து அசாம் மாநிலத்தின் புதிய முதல்வராக ஹிமந்தா பிஸ்வா சர்மா இன்று பதவியேற்றுக் கொண்டார். 

வடகிழக்கு மாநிலத்தில் பாஜக மீண்டும் தனது ஆட்சியைத் தக்கவைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

கருப்பு வெள்ளைப் பூ.. ரவீனா தாஹா!

'தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும்..’ : கமல்ஹாசனின் வைரல் பதிவு!

48 வயதினிலே..

SCROLL FOR NEXT