ஒடிசா துணை சிறைச்சாலையில் 21 கைதிகளுக்கு கரோனா
ஒடிசாவின் மயூர்பஞ்சில் உள்ள உதலா துணை சிறைச்சாலையில் 21 விசாரணை கைதிகளுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டுள்ளது.
ஒடிசாவின் மயூர்பஞ்சில் உள்ள உதலா துணை சிறைச்சாலையில் 21 விசாரணை கைதிகளுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, உதலா சிறையின் நிர்வாக அதிகாரி வித்யாதர் தண்டபாத் தெரிவித்தது,
தொற்று பாதிக்கப்பட்ட சிறைக்கைதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், கைதிகளுக்குத் தேவையான முறையான மருத்துவ சிகிச்சை அளித்து வருகிறோம், சிறந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகிறோம்.
தேவைப்பட்டால் கரோனா பராமரிப்பு மையத்திற்கு அனுப்பிவைப்போம் என்று அவர் கூறினார்.
மேலும், ஒடிசாவில் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி 10,031 பேருக்குப் புதிதாகத் தொற்று பதிவாகியுள்ளது என்று மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.