முகப்பு
இந்தியா

தில்லியில் குறையும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்படும் விகிதம்

தில்லியில் கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 36-இல் இருந்து 19 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:12 PM
கோப்புப்படம்
பகிர்:


தில்லியில் கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 36-இல் இருந்து 19 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.

இதுபற்றி தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் செவ்வாய்க்கிழமை கூறியது:

"கடந்த சில நாள்களாக தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 36 சதவிகிதத்திலிருந்து 19.1 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. தினசரி கரோனா பாதிப்பும் 28 ஆயிரத்திலிருந்து 12,500 ஆகக் குறைந்துள்ளது.

தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 5 சதவிகிதத்துக்குக் கீழ் குறையும் வரையும், தினசரி பாதிப்பு 3,000 முதல் 4,000-க்குக் கீழ் குறையும் வரையும் குடிமக்களால் நிம்மதியடைய முடியாது.

கரோனா 2-ம் அலை இன்னும் உள்ளது. ஏப்ரல் இறுதியிலிருந்து கரோனா உச்சம் குறைந்து வருகிறது. நாள்தோறும் 80,000 பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பொது முடக்கம் காரணமாக மக்கள் வெளியே வருவதில்லை. முன்பு மக்கள் வெளியே வந்ததால் அனைவருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

தில்லியில் 23,000 ஆக்ஸிஜன் படுக்கை வசதிகள் உள்ளன. அதில் 20,000 ஆக்ஸிஜன் படுக்கை வசதிகள் நிரம்பியுள்ளன. இது மிகப் பெரிய எண்ணிக்கை. ஆக்ஸிஜன் தொடர்ந்து விநியோகிக்கப்பட வேண்டும். இல்லையெனில் பிரச்னையாகிவிடும்" என்றார் அவர்.

தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 12,651 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் கரோனா உச்சத்தின்போது 28,000 தொற்று பாதிப்புகள் பதிவான நிலையில் குறிப்பிடத்தக்க அளவில் 13 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.