வின்பாஸ்ட்டின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!
வின்பாஸ்ட்டின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களைப் பற்றி...
தமிழ்நாட்டில் சமீபத்தில் தொடங்கப்பட்ட எலக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனமான வின்பாஸ்ட் வி6, வி7 கார்களை தயாரித்து வருகிறது. தற்போது இந்திய சந்தைகளுக்கென மூன்று புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தவுள்ளது.
பிரத்யேகமாக அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ள இந்த ஸ்கூட்டர்களுக்கு இவோ, ஃபெலிஸ் மற்றும் வைப்பர் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்கூட்டர்களின் மூலம், இந்திய எலக்ட்ரிக் இருசக்கர வாகன சந்தையில் தனக்கான தனி இடத்தைப் பிடிக்கத் தீவிரம் காட்டி வருகிறது.
இந்த நிறுவனம் தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் செயல்பட்டு வந்தாலும், இதற்கான உதிரிபாகங்கள் வியத்நாமில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு இங்கு பொருத்தப்படுகின்றன.
Advertisement
Advertisement
இந்த ஸ்கூட்டர்களின் விற்பனையைப் பொருத்து தூத்துக்குடியில் தயார் செய்யப்படும் திட்டமும் இருப்பதாகக் கூறப்படுகிறது.
மூன்று ஸ்கூட்டரிலும் லித்தியம் பேட்டரிகள் பயன்படுத்தப்படுகின்றன. ஸ்கூட்டரில் 2.4 கிலோவாட்ஸ் ஹவர் திறன் கொண்ட இரண்டு பேட்டரிகளும், 2.25 கிலோவாட் சக்தி வழங்கும் ஹப் மோட்டாரும் இடம்பெறுகிறது.
இந்த ஸ்கூட்டர் அதிகபட்சமாக மணிக்கு 70 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். ஃபெலிஸ் ஸ்கூட்டரில் 3 கிலோவாட்ஸ் ஹவர் பேட்டரி மற்றும் 2.8 கிலோ வாட் மோட்டார் இடம் பெறுகிறது. வைப்பர் ஸ்கூட்டரில் 4.8 கிலோ வாட்ஸ் ஹவர் பேட்டரி மற்றும் 3 கிலோவாட் மோட்டார் வழங்கப்படவுள்ளது .
After making headlines with its upcoming made-in-India VF6 and VF7 electric SUVs, the company is now preparing to launch a range of electric scooters tailored specifically for Indian consumers.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.