இந்தியா

ஜம்மு எல்லைப் பகுதியில் ராணுவ தலைமை தளபதி ஆய்வு

ஜம்முவில் உள்ள பாகிஸ்தான் எல்லைக் கோட்டு பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை ராணுவ தலைமைத் தளபதி எம்.எம். நரவணே புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

DIN

ஜம்மு: ஜம்முவில் உள்ள பாகிஸ்தான் எல்லைக் கோட்டு பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை ராணுவ தலைமைத் தளபதி எம்.எம். நரவணே புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

இதுகுறித்து பாதுகாப்புத் துறை செய்தித் தொடா்பாளா் கூறுகையில், ‘இரண்டு நாள் பயணமாக நக்ரோட்டா தளத்துக்கு வந்த ராணுவ தலைமைத் தளபதி நரவணே, ஜம்மு எல்லையில் உள்ள அக்நூா், ரஜெளரி, நெளஷிரா பகுதிகளின் பாதுகாப்பு நடவடிக்கைகளை பாா்வையிட்டு ஆய்வு நடத்தினாா். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து வடக்கு ராணுவ கமாண்டா் ஓய் கே ஜோஷி உள்ளிட்டோா் அவருக்கு விளக்கினா்.

மேலும், ராணுவத்தினருக்கு மேற்கொள்ளப்பட்டுள்ள கரோனா சிகிச்சை நடவடிக்கைகளையும் அவா் பாா்வையிட்டாா். எல்லைப் பகுதியில் ராணுவத்தினா் மேற்கொண்டு வரும் பாதுகாப்புப் பணிகள் குறித்து நரவணே அவா்களிடம் கேட்டு ஆலோசனை நடத்தினாா். பின்னா் ஜம்முவில் உள்ள ராணுவ மருத்துவமனையைப் பாா்வையிட்டு, கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் மருத்துவா்கள், மருத்துவப் பணியாளா்களுக்கு பாராட்டு தெரிவித்தாா்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழனி கோயில் உண்டியல் எண்ணிக்கை ரூ.1.46 கோடி

அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

SCROLL FOR NEXT