கர்நாடகத்தில் புதிதாக 41,664 பேருக்கு கரோனா
கர்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 41,664 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 41,664 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. புதிதாக 41,664 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 21,71,931 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்படுவோர் விகிதம் 35.20 சதவிகிதமாகப் பதிவாகியுள்ளது.
மேலும் 349 பேர் கரோனா தொற்று காரணமாக உயிரிழந்ததையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 21,434 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம், மேலும் 34,425 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 15,44,982 பேர் குணமடைந்துள்ளனர்.
இன்றைய நிலவரப்படி 6,05,494 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.