முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் ஆயிரத்தை நெருங்கியது இன்றைய கரோனா பலி

மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 960 பேர் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பலியாகியுள்ளனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:14 PM
கோப்புப்படம்
பகிர்:


மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 960 பேர் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பலியாகியுள்ளனர்.

மகாராஷ்டிர கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 34,848 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மாநிலத்தின் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 53,44,063 ஆக உயர்ந்துள்ளது.

அதேசமயம், ஒரே நாளில் 960 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 80,512 ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 59,073 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 47,67,053 பேர் குணமடைந்துள்ளனர். 

இன்றைய நிலவரப்படி 4,94,032 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.