இந்தியா

2-டிஜி கரோனா மருந்தின் விவரங்கள் ஆய்வு செய்யப்படும்- மத்திய அரசு

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ள 2-டிஜி (2 டியோக்ஸி டி-குளூக்கோஸ்) கரோனா மருந்தை நோயாளிகளுக்குப் பயன்படுத்துவதற்காக, அதன் விவரங்கள் விரிவாக ஆய்வு செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

DIN

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ள 2-டிஜி (2 டியோக்ஸி டி-குளூக்கோஸ்) கரோனா மருந்தை நோயாளிகளுக்குப் பயன்படுத்துவதற்காக, அதன் விவரங்கள் விரிவாக ஆய்வு செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தில்லியில் நீதி யோக் அமைப்பின் உறுப்பினா் வி.கே.பால், செய்தியாளா்களுக்கு செவ்வாய்க்கிழமை பேட்டியளித்தபோது கூறியதாவது:

2-டிஜி மருந்தின் விவரங்களை ஆய்வு செய்த இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையம் (டிசிஜிஐ), அதை அவசர கால பயன்பாட்டுக்காக அனுமதி அளித்தது. இந்த மருந்தை கரோனா சிகிச்சையில் முழுமையாக ஈடுபடுத்துவதற்கு முன், அதன் விவரங்களை தேசிய கரோனா தடுப்புக் குழு ஆய்வு செய்யும். அதன் பிறகு இந்த மருந்தை பயன்படுத்துவதற்கான நெறிமுறைகள் வெளியிடப்படும் என்றாா் அவா்.

ஹைதராபாதில் உள்ள டாக்டா் ரெட்டீஸ் நிறுவனத்துடன் இணைந்து பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பின் (டி.ஆா்.டி.ஓ.) இந்திய மருத்துவ அறிவியல் ஆய்வகம் (ஐசிஎம்ஆா்) இணைந்து கரோனா சிகிச்சைக்காக 2-டிஜி என்ற மருந்தை தயாரித்துள்ளது. பொடி வடிவிலான இந்த மருந்தை தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும்.

இந்த மருந்தை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது. முதல் தொகுப்பு மருந்தை பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ் வா்தனிடம் வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்துக்குள்ளான சொகுசு பேருந்து! பதைபதைக்கும் காணொலி!

ஆஸ்திரேலிய போண்டி கடற்கரை தாக்குதல்: தந்தையிடம் துப்பாக்கி பயிற்சி பெற்ற மகன்!

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய நடிகை சமந்தா

இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்து: 15 பேர் பலி

போதைப்பொருள் கடத்தல்: நேபாள விமான நிலையத்தில் இந்தியர்கள் 2 பேர் கைது

SCROLL FOR NEXT