சிங்கப்பூர் விமான சேவையை உடனடியாக ரத்து செய்க: கேஜரிவால் வேண்டுகோள்
சிங்கப்பூரில் உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் பரவி வருவதால் இந்தியா -சிங்கப்பூர் இடையே விமான சேவை ரத்து செய்யப்பட வேண்டும் என்று தில்லி முதல்வர் கேஜரிவால் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
சிங்கப்பூரில் உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் பரவி வருவதால் இந்தியா -சிங்கப்பூர் இடையே விமான சேவை ரத்து செய்யப்பட வேண்டும் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
சிங்கப்பூரில் உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ்கள் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டு வருவதால் அங்கு மே 28 ஆம் தேதி வரை பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்கு வரும் விமானங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
சிங்கப்பூரில் புதிதாக கண்டறியப்பட்ட உருமாறிய கரோனா வைரஸ் பரவுவதை சுட்டிக்காட்டிய அவர், இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்குச் செல்லும், சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்கு வரும் விமானங்களை நிறுத்திவைக்க வேண்டும். சிங்கப்பூருக்கு வந்த கரோனாவின் புதிய வடிவம் குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தானது என்று கூறப்படுகிறது. இது இந்தியாவில் மூன்றாவது அலை பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
எனவே, இந்தியா -சிங்கப்பூர் இடையே விமான சேவை ரத்து செய்யப்பட வேண்டும், குழந்தைகளுக்கும் தடுப்பூசி உருவாக்கப்பட முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற இரு கோரிக்கைகளை மத்திய அரசிடம் முன்வைத்துள்ளார்.