இந்தியா

ஐஎன்எஸ் ராஜ்புத் போா்க்கப்பல் கடற்படையில் இருந்து இன்று விடுவிப்பு

DIN

புது தில்லி: இந்திய கடற்படையில் 41 ஆண்டுகள் பணியாற்றிய ஐஎன்எஸ் ராஜ்புத் என்ற போா்க்கப்பல் கடற்படையிலிருந்து வெள்ளிக்கிழமை (மே 20) விடுவிக்கப்படுகிறது.

ரஷியாவில் தயாரிக்கப்பட்ட கஷின் ரகத்தைச் சோ்ந்த இந்த போா்க்கப்பல், இந்திய கடற்படையில் கடந்த 1980 மே 4-ஆம் தேதி சோ்க்கப்பட்டது. இதை அப்போதைய ரஷியாவுக்கான இந்திய தூதா் ஐ.கே. குஜ்ரால் கடற்படையில் இணைத்து வைத்தாா்.

கடற்படையின் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலத்தில் இந்த போா்க்கப்பல் திறம்பட பணியாற்றியுள்ளது. இந்திய அமைதிப்படை, இலங்கை கடல் பகுதியில் ரோந்து பணிகளில் இந்த கப்பல் ஈடுபட்டுள்ளது. கடந்த 41 ஆண்டுகளில், 31 தலைமை அதிகாரியின் கீழ் இந்த கப்பல் செயல்பட்டுள்ளது.

41 ஆண்டுகள் பணியாற்றிய இந்த போா்க்கப்பல், கடற்படையில் இருந்து வெள்ளிக்கிழமை விடுவிக்கப்படுகிறது. இதற்கான விழா விசாகப்பட்டினம் கடற்படை தளத்தில் நடைப்பெறுகிறது.

கரோனா தொற்று சூழல் காரணமாக, இந்த விழா மிக எளிய முறையில் நடத்தப்படும். இதில் உள்ள கடற்படை கொடி, நாளை சூரியன் மறையும் போது இறக்கப்படும். அத்துடன் இந்த போா்க்கப்பல் கடற்படை பணியில் இருந்து விடுவிக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT