இந்தியா

முதல்வர் பினராயிக்கு ஏ.ஆர். ரஹ்மான் வாழ்த்து

கேரளத்தின் முதல்வராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுள்ள பினராயி விஜயனுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

DIN


கேரளத்தின் முதல்வராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுள்ள பினராயி விஜயனுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக வெளியாகியுள்ள விடியோ ஒன்றில், அதிக கல்வியறிவு கொண்டது கேரள மாநிலம். கேரள மக்களின் நகைப்புத் திறன், ஞானம் போன்றவை அதிகம் ஈர்ப்பவை. கேரளத்தின் முதல்வராக பொறுப்பேற்றுள்ள பினராயி விஜயனுக்கு எனது வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார். 

கேரளத்தில் 140 இடங்களுக்கு நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தோ்தலில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி அபார வெற்றிபெற்றது.

இதையடுத்து அந்த மாநில முதல்வராக பினராயி விஜயன் இன்று (மே 20) பொறுப்பேற்றுக்கொண்டார். மேலும், அவரது சட்டப்பேரவையில் 20 அமைச்சர்களும் இன்று பதவியேற்றுக் கொண்டனர். இவர்களுக்கு கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்தில் சிக்கிய பேருந்து! தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு! | Fire | Bus Accident

கரூர் பலி: நீதிபதி செந்தில்குமார் குறித்த அவதூறு கருத்துக்கு மூவர் கைது!

பயன்பாட்டிற்கு வந்தது கரூர் புதிய பேருந்து நிலையம்

வரும் தீபாவளிப் பண்டிகை எப்படி இருக்கும்? 2011க்குப் பிறகு முதல் முறை!

மாரி செல்வராஜ் சம்பவம் பண்ணிருக்காரு: துருவ் விக்ரம்

SCROLL FOR NEXT