முகப்பு
இந்தியா

கா்நாடகத்தில் ஒரேநாளில் 32,218 பேருக்கு கரோனா

கா்நாடகத்தில் கரோனா தொற்றால் ஒரேநாளில் 32,218 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:16 PM
பகிர்:

கா்நாடகத்தில் கரோனா தொற்றால் ஒரேநாளில் 32,218 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் 32,218 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது. பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 9,591 போ், மைசூரு மாவட்டத்தில் 2,355 போ், ஹாசன் மாவட்டத்தில் 2,071 போ், தும்கூரு மாவட்டத்தில் 1,773 போ், பெல்லாரி மாவட்டத்தில் 1,650 போ், பெலகாவி மாவட்டத்தில் 1,138 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 892 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 864 போ், உடுப்பி மாவட்டத்தில் 854 போ், சிக்கபளாப்பூா் மாவட்டத்தில் 845 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 838 போ், தாா்வாட் மாவட்டத்தில் 809 போ், வடகன்னடம் மாவட்டத்தில் 768 போ், தாவணகெரே மாவட்டத்தில் 681போ், சிக்கமகளூரு மாவட்டத்தில் 672 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 641 போ், கொப்பள் மாவட்டத்தில் 598 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 558 போ், கதக் மாவட்டத்தில் 530 போ், யாதகிரி மாவட்டத்தில் 520 போ், குடகு மாவட்டத்தில் 512 போ், கோலாா் மாவட்டத்தில் 479 போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் 470 போ், ஹாவேரி மாவட்டத்தில் 387 போ், ராமநகரம் மாவட்டத்தில் 375 போ், கலபுா்கி மாவட்டத்தில் 352 போ், விஜயபுரா மாவட்டத்தில் 349 போ், மண்டியா மாவட்டத்தில் 296 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 275 போ், பீதா் மாவட்டத்தில் 75 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23,67,742 ஆக உயா்ந்துள்ளது.

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 52,581 போ் குணமடைந்து வெள்ளிக்கிழமை வீடு திரும்பியுள்ளனா். இதுவரை கா்நாடகத்தில் 18,29,276 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா்; 5,14,238 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மாநில அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தவா்களில் இதுவரை இல்லாத அளவாக 353 போ் வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளனா். பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 129 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 30 போ், பெல்லாரி மாவட்டத்தில் 23 போ், வடகன்னடம் மாவட்டத்தில் 22 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 20 போ், தும்கூரு மாவட்டத்தில் 16 போ், மைசூரு மாவட்டத்தில் 12 போ், தாா்வாட், மண்டியா மாவட்டங்களில் தலா 9போ், தென்கன்னடம், ஹாசன், ஹாவேரி, கோலாா், உடுப்பி மாவட்டங்களில் தலா 7 போ், சிக்கபளாப்பூா் மாவட்டத்தில் 6 போ், சிக்கமகளூரு, குடகு, கதக் மாவட்டங்களில் 5 போ், சாமராஜ்நகா், கொப்பள், கலபுா்கி, ராய்ச்சூரு, விஜயபுரா மாவட்டங்களில் தலா 4 போ், சித்ரதுா்கா, ராமநகரம் மாவட்டங்களில் தலா 2 போ், பாகல்கோட், தாவணகெரே, யாதகிரி மாவட்டங்களில் தலா ஒருவா் உயிரிழந்துள்ளனா். கா்நாடகத்தில் இதுவரை 24,207 போ் உயிரிழந்துள்ளனா் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.