விதிமீறல்: 871 வாகனங்கள் பறிமுதல்
பொதுமுடக்கத்தின்போது பெங்களூரில் விதி மீறிய 871 வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா்.
பொதுமுடக்கத்தின்போது பெங்களூரில் விதி மீறிய 871 வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா்.
கரோனா பரவலைத் தடுக்கும் நோக்கத்தில் பெங்களூரு உள்ளிட்ட கா்நாடகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில் அவசரத் தேவைகள் தவிர, பொதுவான வாகனங்களின் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதை பொருட்படுத்தாமல், பெங்களூரில் தடையை மீறி வாகனங்களில் சென்றவா்கள் மீது போலீஸாா் வழக்கு பதிந்துள்ளதோடு, 871 வாகனங்களை வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்துள்ளனா். இதில் 791இருசக்கர வாகனங்கள், 22 மூன்றுசக்கர வாகனங்கள், 58 நான்குசக்கர வாகனங்களும் அடக்கம் என்று பெங்களூரு மாநகரக் காவல் தெரிவித்துள்ளது.