ஜம்மு காஷ்மீரின் லே மாவட்டத்தில் ஜூன் 7 வரை ஊரடங்கு நீட்டிப்பு
கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில் ஜம்மு-காஷ்மீரின் லே மாவட்டத்தில் ஜூன் 7 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில் ஜம்மு-காஷ்மீரின் லே மாவட்டத்தில் ஜூன் 7 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
லே மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் மருத்துவமனைகளில் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்தவண்ணம் உள்ளது. மேலும் வைரஸ் தொற்று பரவாமல் கட்டுப்படுத்த ஊரடங்கு நீட்டிக்கப்படுவதே ஒரே வழி என்று மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் ஸ்ரீகாந்த் பாலாசாகேப் சூஸ் தெரிவித்துள்ளார்.
ஒருசில தளர்வுகளைத் தவிர லேவில் உள்ள அனைத்து வகையான நடவடிக்கைகள், இயக்கங்களுக்கும் வார இறுதி நாள்களில் முழுமையான கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.