முகப்பு
இந்தியா

கர்நாடகத்தில் புதிதாக 31,183 பேருக்கு கரோனா

கர்நாடகத்தில் புதிதாக 31,183 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:17 PM
பகிர்:

கர்நாடகத்தில் புதிதாக 31,183 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக ஒரேநாளில் 31,183 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23,98,925 ஆக உயா்ந்துள்ளது. 

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 61,766 போ் குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனா். இதுவரை 18,91,042 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்; தற்போது 4,83,204 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். 

மாநில அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தவா்களில் 451 போ் இன்று உயிரிழந்துள்ளனா். இதுவரை 24,658 போ் உயிரிழந்துள்ளனா். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.