கேரளத்தில் எம்எல்ஏ-க்கள் பதவியேற்பு
கேரள எம்எல்ஏ-க்கள் பதவியேற்பு விழா கரோனா கட்டுப்பாடுகளுக்குள்பட்டு திங்கள்கிழமை நடைபெற்றது.
கேரள எம்எல்ஏ-க்கள் பதவியேற்பு விழா கரோனா கட்டுப்பாடுகளுக்குள்பட்டு திங்கள்கிழமை நடைபெற்றது.
கேரளத்தில் 15-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் திங்கள்கிழமை தொடங்கிய நிலையில், புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏ-க்கள் பதவியேற்றுக்கொண்டனர். இடைக்கால பேரவைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள இந்திய தேசிய லீக் கட்சியைச் சேர்ந்தவரும் குன்னமங்கலம் தொகுதி எம்எல்ஏ-வுமான பி.டி.ஏ. ரஹீம் எம்எல்ஏ-க்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
காலை 9 மணிக்குத் தொடங்கி மூன்று மணி நேரம் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் 136 எம்எல்ஏ-க்கள் பதவியேற்றுக் கொண்டனர். 3 எம்எல்ஏ-க்கள் உடல்நலன் கருதி பதவியேற்றுக் கொள்ளவில்லை.
இடைக்கால பேரவைத் தலைவர் பி.டி.ஏ. ரஹீம் ஏற்கெனவே ஆளுநர் ஆரிஃப் முகமது கான் முன்னிலையில் கடந்த வாரம் பதவியேற்றுக் கொண்டார்.
தமிழில் பதவியேற்பு:
தேவிகுளம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வழக்கறிஞர் ராஜா, தமிழில் பதவியேற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.