முகப்பு
இந்தியா

ஆந்திரத்தில் படகு கவிழ்ந்ததில் ஒருவர் பலி, 8 பேர் மாயம்

ஒடிசா-ஆந்திரப் பிரதேச எல்லையில் உள்ள சிலேரு ஆற்றில் படகு  கவிழ்ந்ததில் ஒருவர் பலி, 8 பேர் மாயமாகியுள்ளனர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:18 PM
ஆந்திரத்தில் படகு கவிழ்ந்ததில் ஒருவர் பலி, 8 பேர் மாயம்
பகிர்:

ஒடிசா-ஆந்திரப் பிரதேச எல்லையில் உள்ள சிலேரு ஆற்றில் படகு  கவிழ்ந்ததில் ஒருவர் பலி, 8 பேர் மாயமாகியுள்ளனர். 

விசாகப்பட்டினம் காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) பி.வி.கிருஷ்ண ராவ்  கூறுகையில், 

ஹைதராபாத்திலிருந்து 11 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் திங்கள்  இரவு ஒடிசாவுக்கு  தங்கள் சொந்த கிராமத்திற்கு ஒரு படகில் வந்துகொண்டிருந்தபோது படகு திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் எட்டு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நீரில்  மூழ்கியுள்ளனர் மற்றும் ஒரு குழந்தையின் உடல்  கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் ராவ் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.