கரோனா இரண்டாவது அலையில் ஒரே மாநிலத்தில் 2500 இளைஞர்கள் பலி
நாடு முழுவதும் கரோனா தொற்றின் இரண்டாவது அலை நாளுக்கு நாள் சுனாமியாய் வேகமெடுத்து வீசி வருகிறது. தொற்றின் இரண்டாவது அலையில் கர்நாடகாவில் மட்டும் 2500 இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர் என்ற தகவல் அதிர்ச்சிய
நாடு முழுவதும் கரோனா தொற்றின் இரண்டாவது அலை நாளுக்கு நாள் சுனாமியாய் வேகமெடுத்து வீசி வருகிறது. தொற்றின் இரண்டாவது அலையில் கர்நாடகாவில் மட்டும் 2500 இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர் என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரோனா முதல் அலையைத் திறமையாக கட்டுப்படுத்திய மத்திய, மாநில அரசுகள், 2-ஆவது அலையைக் கட்டுப்படுத்த திணறி வருகிறது. நாட்டில் கரோனா தொற்றுக்கு 5 மாநிலத் தோ்தலும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் கரோனா இரண்டாவது அலையால் நகரங்கள் மட்டுமின்றி, கிராமங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. கிராமங்களில் பாதிக்கப்பட்டவா்கள் தனிமைப்படுத்திக் கொள்ளத் தேவையான வசதிகள் இல்லாத நிலையில் மூன்றாவது முறையாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமுடக்கத்தின்போது அவசியம் இல்லாமல் யாரும் வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது கரோனா பாதிப்பைத் தொடா்ந்து கருப்புப் பூஞ்சை நோயால் பாதிக்கப்படுவா்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது மேலும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
கரோனா தொற்றின் முதல் அலையில் பெரும்பாலும் 60 வயதுக்கு மேற்பட்டோரை அதிகமாக தாக்கியது. ஆனால் இரண்டாவது அலையின் கோரப்பிடியில் பல நடுத்தர மற்றும் இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 25,311 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டது.
பெங்களூரு நகரம்-6,243, மைசூரு-2,241, தும்கூரு-1,312, ஹாசன்- 1,285, பெலகாவி-1,260, வடகன்னடம்- 992, பெங்களூரு ஊரகம்- 837, சிக்கமகளூரு-797, தென்கன்னடம்- 755, பெல்லாரி- 718, தாா்வாட்- 709, உடுப்பி- 640, கோலாா்- 585, சிவமொக்கா- 529, தாவணகெரே- 515, ராய்ச்சூரு-430, சித்ரதுா்கா-392, சாமராஜ் நகா்-282, கதக்- 259, ராமநகரம்-252, மண்டியா-244, குடகு- 213, பாகல்கோட்- 211, கொப்பள்- 206, சிக்கபளாப்பூா் -176, ஹாவேரி- 168, கலபுா்கி- 165, யாதகிரி-153, விஜயபுரா-141, பீதா்-48 என்ற எண்ணிக்கையில் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24,72,972 ஆக உயா்ந்துள்ளது.
கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 38,224 போ் செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினா். இதுவரை கா்நாடகத்தில் 20,22,172 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 4,24,381 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தவா்களில் இதுவரை இல்லாத அளவில் மாநில அளவில் 588 போ் செவ்வாய்க்கிழமை இறந்துள்ளனா். கா்நாடகத்தில் இதுவரை 26,399 போ் இறந்துள்ளனா் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 17-ஆம் தேதி முதல் மே 17-ஆம் வரை முடிவடைந்த 2 மாத காலத்தில் மட்டும் 60 சதவீதம் இளைஞர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 14.31 லட்சம் இளைஞர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 8.57 லட்சம் இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே காலக்கட்டத்தில் 2,500 இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் தொற்று பரவத் தொடங்கிய கடந்த ஒராண்டில் மட்டும் 4,488 இளைஞர்கள் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
மாநிலத்தில் அதிக இஞைர்களுக்கு உயிரிழப்புக்கு அவர்களின் அலட்சிய போக்கும், பாதுகாப்பு விதிகளை முறையாக பின்பற்றாமல் இருந்ததே காரணம் என மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கரோனாவில் பாதிக்கப்பட்டவா்களுக்கு இலவச சிகிச்சை அளித்து வருகின்றன. 7 கோடி மக்கள்தொகை கொண்ட கா்நாடகத்தில் இதுவரை 30 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.