முகப்பு
இந்தியா

அசாம் எம்எல்ஏ கரோனாவுக்கு பலி

அசாம் எம்எல்ஏ மஜேந்திர நர்சரி கரோனா தொற்று பாதித்து அரசு மருத்துவமனையில் இன்று உயிரிழந்தார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:18 PM
அசாம் எம்எல்ஏ கரோனாவுக்கு பலி
பகிர்:

அசாம் எம்எல்ஏ மஜேந்திர நர்சரி கரோனா தொற்று பாதித்து அரசு மருத்துவமனையில் இன்று உயிரிழந்தார். 

68 வயதாகும் மஜேந்திர நர்சரி போடோலாண்ட் மக்கள் முன்னணி (பிபிஎஃப்) தலைவராக இருந்தார். அவர் மனைவி மற்றும் நான்கு குழந்தைகளுடன் வசித்து வந்தார். 

இந்நிலையில் அவரது உடல்நிலை மோசமடைந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு கௌஹாத்தி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். 

அசாமின் கோக்ராஜர் மாவட்டத்தில் 2006 முதல் கோசைகான் தொகுதியில் எம்எல்ஏவாக இருந்தவர். சமீபத்தில் முடிவடைந்த சட்டமன்றத் தேர்தலில் 10,000க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் யுபிபிஎல்லின் சோம்நாத் நர்சரியை எதிர்த்தார்.

நர்சரி முன்னதாக உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக இருந்தார். மேலும் பல சமூக அமைப்புகளுடன் தொடர்புடையவர். அவரது குடும்பத்தினருக்கு சுகாதாரத்துறை அமைச்சர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். 

முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா மற்றும் அரசியல் தலைவர்கள் அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.