சுதந்திரப் போராட்டத் தியாகி ஹெச்.எஸ். துரைசாமி காலமானார்
சுதந்திர போராட்டத் தியாகி ஹெச்.எஸ். துரைசாமி மாரடைப்பு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 103.
சுதந்திரப் போராட்டத் தியாகி ஹெச்.எஸ். துரைசாமி மாரடைப்பு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 103.
சுதந்திரப் போராட்ட வீரரும், சமூக ஆர்வலருமான ஹெச்.எஸ். துரைசாமி கடந்த மே 8 ஆம் தேதி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்று குணமடைந்த நிலையில் கடந்த 13 ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இந்நிலையில் இன்று அவருக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இன்று பிற்பகல் 1.40 மணியளவில் அவர் மறைந்தார். ஏற்கெனவே அவருக்கு ஆஸ்துமா பிரச்னை இருந்ததாகவும் கூறப்படுகிறது.
ஹெச்.எஸ். துரைசாமிக்கு ஒரு மகன், ஒரு மகள் இருக்கின்றனர்.
கடந்த 1918, ஏப்ரல் 10 அன்று வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்து பிரிட்டிஷாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 1943-44 காலத்தில் 14 மாதங்கள் அவர் சிறைவாசம் அனுபவித்தார். அன்றிலிருந்து இன்று வரை பல்வேறு பிரச்னைகளுக்கு குரல் கொடுத்துள்ளார். மதச்சார்பார்பற்றவர் என்பதை கடைசிவரை கடைப்பிடித்தவர். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.