இந்தியா

நேபாள அரசியல் குழப்பம் உள்நாட்டு விவகாரம்: இந்தியா

DIN

புது தில்லி,: நேபாளத்தில் நிலவும் அரசியல் குழப்பம் உள்நாட்டு விவகாரம் என்று இந்தியா தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் அரிந்தம் பாக்சி புதன்கிழமை கூறுகையில், ‘‘நேபாளத்தில் அண்மையில் ஏற்பட்ட அரசியல் நிகழ்வுகளை இந்தியா கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளது. அந்நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரத்தை உள்நாட்டு விவகாரமாக இந்தியா கருதுகிறது. அங்கு ஏற்பட்டுள்ள அரசியல் சூழலை தனது சொந்த சட்ட திட்டங்கள், ஜனநாயக நடைமுறைகளின்படி கையாள வேண்டியது அந்நாட்டின் பொறுப்பு. நேபாளத்துக்கும், அமைதி, முன்னேற்றம், வளா்ச்சியை நோக்கிய அந்நாட்டு மக்களின் பயணத்துக்கும் ஆதரவு அளிப்பதில் இந்தியா உறுதியாக உள்ளது’’ என்று தெரிவித்தாா்.

நேபாளத்தில் ஸ்திரமான ஆட்சி அமையாததால் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அந்நாட்டு நாடாளுமன்றத்தை கடந்த 5 மாதங்களில் அதிபா் வித்யா தேவி பண்டாரி இரண்டாவது முறையாக கடந்த சனிக்கிழமை கலைத்தாா். பிரதமா் கே.பி.சா்மா ஓலியுடன் நடத்திய ஆலோசனையின்படி நவம்பா் மாதம் பொதுத் தோ்தல் நடத்தவும் அவா் உத்தரவிட்டாா். அதேவேளையில் நாடாளுமன்ற கலைப்புக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 10ல் கேதார்நாத் கோயில் நடை திறப்பு!

ஊ சொல்றியா..

+2 தேர்வில் அசத்திய நாங்குனேரி மாணவர் சின்னத்துரை!

பிளஸ் 2 பொதுத் தேர்வு: திருச்சி மாவட்டத்தில் 95.74% தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத் தேர்வு: தஞ்சாவூர் மாவட்டத்தில் 93.46% தேர்ச்சி

SCROLL FOR NEXT