ஆப்கனில் வான்வழித் தாக்குதல்: 23 தலிபான் தீவிரவாதிகள் பலி
ஆப்கானிஸ்தானின் பால்க் மாகாணத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களில் மொத்தம் 23 தலிபான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானின் பால்க் மாகாணத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களில் மொத்தம் 23 தலிபான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
இதுதொடர்பாக செய்தித் தொடர்பாளர் அறிக்கையின்படி,
வியாழக்கிழமை பிற்பகல் ஷோல்கரா மாவட்டத்தின் போடனா காலா கிராமத்தில் இந்த வான்வழித் தாக்குதல் தொடங்கப்பட்டது. இதில் ஆயுதமேந்திய 23 தீவிரவாதிகள் பலியாகியுள்ளனர் மற்றும் 11 பேர் காயமடைந்தனர்.
Advertisement
தாக்குதலின்போது, மூன்று வாகனங்கள் அழிக்கப்பட்டுள்ளன. பால்க் மாகாணத்தின் சில பகுதிகளில் மசார்-இ-ஷெரீப்பை அதன் தலைநகராகக் கொண்டு செயல்படும் தலிபான் தீவிரவாதிகள் இதுகுறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.