காஷ்மீரில் அடையாளம் தெரியாத தீவிரவாதி சுட்டுக் கொலை 
இந்தியா

காஷ்மீரில் அடையாளம் தெரியாத தீவிரவாதி சுட்டுக் கொலை

தெற்கு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதலில் தீவிரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

IANS

தெற்கு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதலில் தீவிரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கானாபோரா பகுதியில் துப்பாக்கிச் சண்டை தொடங்கியது. காவல்துறையினரும் ராணுவத்தினரும் தீவிரவாதிகள் பதுங்கியிருந்த பகுதியைச் சுற்றி வளைத்துத் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். 

தீவிரவாதிகள் மறைந்திருந்து பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் அடையாளம் தெரியாத தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டார். 

சம்பவ இடத்தில் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தவெக செயல்வீரா்கள் கூட்டம்

சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் மாரத்தான் போட்டி

வாழப்பாடியில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கத்தின் சாா்பில் சாலை மறியல் போராட்டம்

பாஜக தெருமுனை பிரசாரக் கூட்டம்

செங்கல்பட்டில் மொத்த வாக்காளா்கள் 22,60,036

SCROLL FOR NEXT