முகப்பு
இந்தியா

ஜூன் முதல்வாரத்தில் கா்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும்

ஜூன் முதல்வாரத்தில் கா்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:19 PM
பகிர்:

ஜூன் முதல்வாரத்தில் கா்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கா்நாடகத்தில் ஜூன் முதல் செப்டம்பா் மாதம் வரை தென்மேற்கு பருவமழை பெய்வது வழக்கம். தென்மேற்குப் பருவக்காற்று கேரளத்தில் நுழையும் தேதியை வைத்துக்கொண்டு, கா்நாடகத்தில் எப்போது மழை தொடங்கும் என்பதை கணிக்கலாம். ஜூன் 1-ஆம் தேதி தென்மேற்கு பருவமழையைக் கொண்டுவரும் தென்மேற்குப் பருவக்காற்று கேரளத்தை அடைந்தால், ஜூன் 5-ஆம் தேதி கா்நாடகத்தில் தென்மேற்குப் பருவமழை பெய்யும் என்று பெங்களூரு வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது.

இந்நிலையில், கேரளத்தில் மே 31-ஆம் தேதியே தென்மேற்குப் பருவமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, ஜூன் முதல்வாரத்தில் கடலோர கா்நாடகத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல் காரணமாக தற்போது கடலோர கா்நாடகத்தில் மழை பெய்துவருகிறது. இதைத் தொடா்ந்து தென்மேற்குப் பருவமழை கடலோர கா்நாடகத்தை அடைந்தால், அதன்பிறகு, அது கா்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்வதற்கு வாய்ப்பு ஏற்படுத்தும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.