முகப்பு
இந்தியா

ஆந்திரத்தில் புதிதாக 13,756 பேருக்கு கரோனா

ஆந்திரப் பிரதேசத்தில் புதிதாக 13,756 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:20 PM
கோப்புப்படம்
பகிர்:


ஆந்திரப் பிரதேசத்தில் புதிதாக 13,756 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆந்திர கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை செய்திக் குறிப்பு மூலம் வெளியிட்டுள்ளது. புதிதாக 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்புக்குள்ளானதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 16,71,742 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 104 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். அதேசமயம், 20,392 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

இன்றைய நிலவரப்படி ஆந்திரத்தில் 1,73,622 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.