முகப்பு
இந்தியா

தில்லியில் 100-க்குக் கீழ் குறைந்தது இன்றைய கரோனா பலி

தில்லியில் 47 நாள்களுக்குப் பிறகு முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை தினசரி கரோனா பலி எண்ணிக்கை 100-க்குக் கீழ் குறைந்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:20 PM
கோப்புப்படம்
பகிர்:


தில்லியில் 47 நாள்களுக்குப் பிறகு முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை தினசரி கரோனா பலி எண்ணிக்கை 100-க்குக் கீழ் குறைந்துள்ளது.

தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 946 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 78 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். மேலும் 1,803 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

இதைத் தொடர்ந்து, தில்லியில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 14,25,592 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 13,89,341 பேர் குணமடைந்துள்ளனர். 24,151 பேர் பலியாகியுள்ளனர். இன்றைய நிலவரப்படி 12,100 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 1.25 சதவிகிதமாக உள்ளது.

அரசு தரவுகளின்படி கடந்த 24 மணி நேரத்தில் 75,440 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதுவரை 1,92,37,040 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.