டேஹ்ராடூன்: உத்தரகண்டில் கரோனா பெருந்தொற்று அதிகரித்து வருவதால், நடைமுறையில் இருக்கும் ஊரடங்கை ஜூன் 9 வரை நீட்டித்து மாநில அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.
இந்த ஊரடங்கு நீட்டிப்பு குறித்து உத்தரகண்ட் அரசு செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிவிப்பில், உத்தரகண்டில் நடைமுறையில் இருக்கும் ஊரடங்கு ஜூன் 9 வரை நீட்டிக்கப்படுகிறது. அதேவேளையில், வாரத்தில் ஜூன் 1 மற்றும் 7ஆம் தேதி என இரண்டு நாள்கள் மட்டும் மளிகைக் கடைகள் காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை இயங்க அனுமதி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
கரோனா பெருந்தொற்றை தடுக்கும் வகையில் உத்தரகண்டில் ஜூன் 9 வரை ஊரடங்கை நீட்டிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேவேளையில் இதுவரை மளிகைக் கடைகள் காலை 8 மணி முதல் 11 மணி வரை மட்டும் இயங்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், ஜூன் 1 மட்டும் நோட்டு, புத்தகக் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதைத் தவிர்த்து மற்ற அனைத்து கட்டுப்பாடுகளும் தொடர்ந்து நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.