இந்தியா

மேற்குவங்க தலைமைச் செயலரை விடுவிக்க முடியாது: மம்தா

கரோனா காலகட்டத்தில் தலைமைச் செயலாளரை விடுவிக்க முடியாது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

DIN

கரோனா காலகட்டத்தில் தலைமைச் செயலாளரை விடுவிக்க முடியாது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

தலைமைச் செயலாளரை திரும்பப்பெறும் முடிவை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.

மேற்கு வங்கத்தின் தலைமைச் செயலாளரான அலபன் பந்தோபத்யாய இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார். 

கரோனா அதிகரித்து வரும் நிலையில், புதிய தலைமைச் செயலரை நியமிப்பதற்கு பதிலாக அவருக்கு மேலும் 3 மாதங்கள் பணி நீட்டிப்பு வழங்க முதல்வர் மமதா பானர்ஜி அனுமதி கோரியிருந்தார்.

இந்நிலையில் கரோனா பெருந்தொற்று சூழலைக் காரணம் காட்டி தலைமைச் செயலாளரை விடுவிக்க முடியாது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

பதவிக்காலம் நிறைவடையவுள்ளதையொட்டி தில்லி உள்துறை அமைச்சகத்தில் அலபன் பந்தோபத்யாய ஆஜராக வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT