இந்தியா

உ.பி. தேர்தல்: இலவச ஸ்மார்ட்ஃபோன், ஸ்கூட்டி - பிரியங்கா அதிரடி

ANI


புது தில்லி: உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், பள்ளி மாணவிகளுக்கு இலவச ஸ்மார்ட்ஃபோன், இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி அறிவித்துள்ளார்.

தனது சுட்டுரைப் பக்கத்தில் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டிருக்கும் பிரியங்கா காந்தி காங்கிரஸ் கட்சி தேர்தல் வெற்றி பெற்று ஆட்சியமைத்தால் பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணச் சலுகை அளிக்கப்படும். பள்ளி மாணவிகளுக்கு ஸ்மார்ட்ஃபோன் மற்றும் இருசக்கர வாகனம் இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்ததும், அது அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். விதவைகளுக்கு மாதம் ரூ.1000 நிதியுதவி வழங்கப்படும்.  பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம், பெண்களுக்கு மூன்று எரிவாயு உருளைகள் இலவசமாக வழங்கப்படும் என்றும் பட்டியலிட்டுள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் வரும் ஆண்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அந்நியச் செலாவணி கையிருப்பு 64,415 கோடி டாலராக உயா்வு

பந்தன் வங்கி நிகர லாபம் சரிவு

பிரதமா் மோடி, ராகுல் காந்தி பிரசாரம்: தில்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

மழை மாணிக்காக பாதுகாப்பு வேலி அமைக்க ஆய்வு

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

SCROLL FOR NEXT