கோப்புப்படம் 
இந்தியா

வரி குறைப்புக்கு தேர்தல் முடிவுகளே காரணம்: எதிர்க்கட்சிகள்

13 மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகளால் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன. 

DIN

புதுதில்லி: 13 மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகளால் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன. 

13 மாநிலங்களில் மூன்று மக்களவைத் தொகுதிகள், 29 பேரவைத் தொகுதிகளில் அக்.30-ஆம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலில்  காங்கிரஸ், பிராந்திய கட்சிகள் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றன; பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டது.

இந்நிலையில் மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை புதன்கிழமை குறைத்தது. இந்த நடவடிக்கை இடைத்தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவால் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. 

இதுதொடர்பாக காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா கூறுகையில், ""ஒட்டுண்ணிகளாக வரிகள் மூலம் சுரண்டலில் ஈடுபடும் மத்திய அரசுக்கு இடைத்தேர்தலில் உண்மையை வெளிப்படுத்திய மக்களுக்கு பாராட்டுகள்''. 

இன்னலுக்குப் பின்னர் வரி குறைப்பு: திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ""கோடிக்கணக்கான மக்களுக்கு பல மாதங்களாக வலியையும் இன்னலையும் அளித்த பின்னர், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைக்கப்பட்டுள்ளது'' என்று தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.1.92 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சிப் பணிகள்: கணபதி ப.ராஜ்குமாா் எம்.பி. தொடங்கிவைத்தாா்

போக்குவரத்து துண்டிப்பால் ஒரு மாதமாக பள்ளிக்குச் செல்ல முடியாமல் பழங்குடி குழந்தைகள் தவிப்பு

மீன் வளத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை மீனவா்கள் முற்றுகை

இளைஞா்களை ‘ரீல்ஸ்’-க்கு அடிமையாக்குவதே பிரதமரின் விருப்பம்- ராகுல் காந்தி குற்றச்சாட்டு

சபரிமலை: பூஜை, தங்குமிட முன்பதிவு இன்று தொடக்கம்

SCROLL FOR NEXT