முகப்பு
இந்தியா

கர்நாடகம்: இரவு ஊரடங்கு ரத்து

கர்நாடகத்தில் இரவு ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்திருக்கிறது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:31 AM
கர்நாடகம்: இரவு ஊரடங்கு ரத்து
பகிர்:

கர்நாடகத்தில் இரவு ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்திருக்கிறது.

கர்நாடகத்தில் கரோனாவின் தீவிரத்தால் கடந்த ஜுலை மாதம் அமலுக்கு வந்த இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரையிலான இரவு ஊரடங்கை இன்று முதல் ரத்து செய்வதாக அம்மாநில அரசு தெரிவித்திருக்கிறது.

சில வாரங்களாக கரோனாத் தொற்று கட்டுக்குள் வந்ததைத் தொடர்ந்தும் பெங்களூருவில் கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதியிலிருந்து நேற்று வரையிலான 73 நாட்களில் கரோனாவால் பாதித்தவர்களில் ஒருவர் கூட பலியாகவில்லை என அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்ததைத் தொடர்ந்து கர்நாடகாவில் கடைபிடிக்கப்பட்ட இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யலாம் என ஆலோசனை நடந்து வந்த நிலையில் தற்போது அதைத் தடை செய்வதற்கான உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார்கள்

மேலும் குதிரைப் பந்தயம் நடைபெறுவதற்கும் நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. போட்டிகளில் பங்கு பெறுபவர்கள் மற்றும் பார்வையாளர்கள் கண்டிப்பாக கரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

முழு கட்டுரையைப் படிக்க →