புதுச்சேரி கடற்கரை காந்தி சிலை அருகில் நடைபெற்ற 75 எண்ணிக்கைகள் கொண்ட படகுகளின் அணிவகுப்பு நிகழ்ச்சி. 
இந்தியா

புதுச்சேரியில் 75வது சுதந்திர தின விழா படகுகள் அணிவகுப்பு

புதுச்சேரியில் அரசு சார்பில் நாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழா கொண்டாடும் வகையில், 75 எண்ணிக்கைகள் கொண்ட படகுகள் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

DIN


புதுச்சேரியில் அரசு சார்பில் நாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழா கொண்டாடும் வகையில், 75 எண்ணிக்கைகள் கொண்ட படகுகள் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

புதுச்சேரி அரசு சார்பில் நாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழா கொண்டாடும் வகையில், பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒரு அங்கமாக புதுச்சேரி அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மூலம் புதுச்சேரி கடற்கரை காந்தி சிலை அருகில், சனிக்கிழமை 75 எண்ணிக்கைகள் கொண்ட படகுகளின் (வெளிப்புற இயந்திர பொருந்திய கட்டுமரங்களின்) அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

புதுச்சேரி கல்வித்துறை சார்பில் நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில், மாணவர்களின் விழிப்புணர்வு ஓட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்த சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன்.

முதல்வர் என்.ரங்கசாமி  கொடி அசைத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். மீன்வளத்துறை அமைச்சர் க.லட்சுமி நாராயணன், உள்துறை அமைச்சர் ஏ.நமச்சிவாயம் மற்றும் அதிகாரிகள், பொதுமக்கள் பங்கேற்றனர். 

கடலில் 75 படகுகளில் பங்கேற்ற மீனவர்கள் தேசியக்கொடியுடன் அணிவகுப்பு நடத்தி பார்வையாளர்களை கவர்ந்தனர்.

மாணவர்கள் விழிப்புணர்வு ஓட்டம்
இதேபோல் புதுச்சேரி கல்வித்துறை சார்பில் நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில், மாணவர்களின் விழிப்புணர்வு ஓட்டம் நடைபெற்றது. சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். கல்வி அமைச்சர் நமச்சிவாயம், கல்வித்துறை அதிகாரிகள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் பங்கேற்ற மாணவர்கள், புதுச்சேரி கடற்கரை சாலையில், 10 கிலோமீட்டர் தொலைவு சென்று விழிப்புணர்வு ஓட்டத்தில் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குல்தீப் 5 விக்கெட்டுகள்: 248 ரன்களுக்கு ஆட்டமிழந்த மே.இ.தீ!

9 ஆண்டுகால பாஜக ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு மிகப்பெரியளவில் கேள்விக்குறியாகி உள்ளது! -அகிலேஷ் யாதவ்

சென்ராயப் பெருமாள் கோயிலில் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம்

கனமழையால் வெள்ளம்! தண்ணீரில் மிதந்து சென்ற உணவகம்! | Mexico

மருத்துவக் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: 3 பேர் கைது!

SCROLL FOR NEXT