மாநிலங்களிடம் 15.69 கோடி கரோனா தடுப்பூசிகள் இருப்பு: மத்திய சுகாதார அமைச்சகம்
மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை வழங்கிய கரோனா தடுப்பூசிகளில் 15.69 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் பயன்படுத்தப்படாமல் மீதமுள்ளன என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை வழங்கிய கரோனா தடுப்பூசிகளில் 15.69 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் பயன்படுத்தப்படாமல் மீதமுள்ளன என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது. தடுப்பூசி திட்டத்தின் வேகத்தை மேலும் அதிகரித்து, நாட்டில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.
தேசிய அளவிலான இந்தத் திட்டத்தில், தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து 75 சதவீத தடுப்பூசிகளை மத்திய அரசு வாங்கி, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது.
அதன்படி, இதுவரை 116.54 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அவற்றில் 15,69,46,111 தடுப்பூசிகள் பயன்படுத்தப்படாமல் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கையிருப்பில் உள்ளன என்று மத்திய சுகாதார அமைச்சம் தெரிவித்துள்ளது.
108 கோடியை கடந்தது: சனிக்கிழமை இரவு 7 மணி அளவில் வெளியான தற்காலிக அறிக்கையின்படி, கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட தவணை 108 கோடியை (108,18,66,715) கடந்தது. சனிக்கிழமை மட்டும் 25 லட்சத்துக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.