லக்கிம்பூர் வன்முறை: உ.பி. காவல்துறை விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் அதிருப்தி 
இந்தியா

லக்கிம்பூர் வன்முறை: உ.பி. காவல்துறை விசாரணை குறித்து உச்ச நீதிமன்றம் அதிருப்தி

லக்கிம்பூர் வன்முறைச் சம்பவம் குறித்து உத்தரப்பிரதேச காவல்துறை விசாரணை குறித்து உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

DIN


புது தில்லி: லக்கிம்பூர் வன்முறைச் சம்பவம் குறித்து உத்தரப்பிரதேச காவல்துறை விசாரணை குறித்து உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

லக்கிம்பூர் வன்முறை குறித்த விசாரணையை உத்தரப்பிரதேச காவல்துறை மிக மெத்தனமாக நடத்துவதாக உச்ச நீதிமன்றம் குற்றம்சாட்டியுள்ளது.  லக்கிம்பூர் வழக்கில் தடயவியல் விசாரணை அறிக்கை கூட இதுவரை வெளிவராமல் இருக்கிறது. உத்தரப்பிரதேச அரசு இதுவரை அளித்த விசாரணை நிலை குறித்த அறிக்கையில் எதுவுமே இல்லை. குற்றம்சாட்டப்பட்டவர்களின் செல்லிடப்பேசியை கூட காவல்துறையினர் இதுவரை பறிமுதல் செய்யவில்லை.

லக்கிம்பூர் விவகாரத்தில் காவல்துறை விசாரணையை ஏன் ஒரு ஓய்வு பெற்ற நீதிபதியைக் கொண்டு கண்காணிக்கக் கூடாது? என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

உச்ச நீதிமன்ற கேள்விகளுக்கு வெள்ளிக்கிழமை பதிலளிப்பதாக உத்தரப்பிரதேச அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞர் பதிலளித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் கடந்த மாதம் விவசாயிகள் மீது கார் ஏற்றியதில் 8 பேர் பலியாகினர். இச்சம்பத்தில், மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்ட நிலையில் 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணையின்போது வன்முறை குறித்த கேள்விகளுக்கு ஆஷிஷ் மிஸ்ரா பதிலளிக்கவில்லை என்பதாலும், விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்பதாலும் கைது செய்யப்பட்டார்.

இந்தச் சம்பவம் குறித்த விசாரணையை உச்ச நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணைக்கு ஏற்றது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பூர் அருகே அதிமுக எம்எல்ஏ தோட்டத்தில் எஸ்.ஐ. வெட்டிக் கொலை!

சிறுமி உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை!

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: நலத் திட்ட உதவிகள் வழங்கினாா் எம்எல்ஏ

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

தேவை இல்லை என்ற நிலையை உருவாக்கினால் மது ஒழிப்பு சாத்தியம் - சி. மகேந்திரன்

SCROLL FOR NEXT