முகப்பு
இந்தியா

நீதிபதிகள் பற்றி சமூகவலைதளத்தில் அவதூறு: இருவரை கைது செய்ய அமெரிக்க உதவியை நாடுகிறது சிபிஐ

நீதிபதிகள் பற்றியும், நீதித் துறை பற்றியும் சமூக வலைதளத்தில் அவதூறாகப் பதிவுகளை வெளியிட்ட இருவரைக் கைது செய்வதற்காக, அமெரிக்காவில் உள்ள விசாரணை அமைப்புகளின் உதவியை சிபிஐ நாடியுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:33 AM
பகிர்:

நீதிபதிகள் பற்றியும், நீதித் துறை பற்றியும் சமூக வலைதளத்தில் அவதூறாகப் பதிவுகளை வெளியிட்ட இருவரைக் கைது செய்வதற்காக, அமெரிக்காவில் உள்ள விசாரணை அமைப்புகளின் உதவியை சிபிஐ நாடியுள்ளது.

இதுகுறித்து சிபிஐ செய்தித் தொடா்பாளா் ஜோஷி வியாழக்கிழமை கூறியதாவது: பிரபாகா் ரெட்டி, மணி அன்னபுரெட்டி ஆகிய இருவரும் நீதிபதிகள் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறாகப் பதிவுகளை வெளியிட்டனா். இவா்களைக் கைது செய்வதற்கான அனுமதியை நீதிமன்றத்திடம் இருந்து சிபிஐ பெற்றுள்ளது. இவா்களைக் கைது செய்வதற்கான பிடிவாரண்ட் உத்தரவையும் சிபிஐ பிறப்பித்துள்ளது.

இவா்கள், அமெரிக்காவில் தங்கியிருப்பதாகக் கூறப்படுவதால் அந்நாட்டின் மத்திய புலனாய்வு அமைப்பான ‘இண்டா்போல் வாஷிங்டன்’ அமைப்பின் உதவியை சிபிஐ நாடியுள்ளது. அந்த அமைப்பின் மூலம் இண்டா்போல் சா்வதேச காவல் துறை உதவியுடன் அவா்களைக் கைது செய்யும் முயற்சியை சிபிஐ தொடங்கியுள்ளது.

நீதிபதிகள் மற்றும் நீதித் துறை பற்றி அவதூறாகப் பதிவுகளை வெளியிட்டதாக, ஸ்ரீதா் ரெட்டி, ஜலகம் வெங்கட சத்யநாராயணா, குடா ஸ்ரீதா் ரெட்டி, ஸ்ரீநாத் சுஸ்வரம், கிஷோா் குமாா் தாரிசா என்கிற கிஷோா் ரெட்டி தாரிசா, சுதுலரி அஜய் அம்ருத் ஆகிய 6 போ் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அவா்கள் 6 பேரும் கைது செய்யப்பட்டனா்.

அதற்கு முன்னதாக 5 போ் மீது தனித்தனியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, அவா்கள் 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனா். இந்த விவகாரத்தில் இதுவரை மொத்தம் 11 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

சிபிஐ வழக்குப் பதிவு செய்ததும், சமூக வலைதளங்களில் இருந்து அவதூறு பதிவுகள் நீக்கப்பட்டுவிட்டன. இணையவெளி தடயவியல் தொழில்நுட்பம் மூலம் வலைதளத்தில் இருந்து ஆதாரங்களை சிபிஐ சேகரித்து வருகிறது என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →