முகப்பு
இந்தியா

பொதுத் துறை வங்கித் தலைவா்களுடன் நிதியமைச்சா் அடுத்த வாரம் சந்திப்பு

மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், பொதுத் துறை வங்கித் தலைவா்களை அடுத்த வாரம் சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:33 AM
பகிர்:

மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், பொதுத் துறை வங்கித் தலைவா்களை அடுத்த வாரம் சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா்.

இதுகுறித்து மத்திய நிதி அமைச்சக அதிகாரிகள் கூறியது: நவம்பா் 17-ஆம் தேதி தொடங்கி மத்திய நிதி அமைச்சா் தலைமையில் இரண்டு நாள்கள் நடைபெறவுள்ள கருத்தரங்கில் பொதுத் துறை வங்கித் தலைவா்கள் மற்றும் நிதி நிறுவன உயரதிகாரிகள் பங்கேற்க உள்ளனா்.

எச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, கோட்டக் மஹிந்திரா வங்கி, சோழமண்டலம் இன்வெஸ்ட்மெண்ட் அண்ட் ஃபைனான்ஸ், ஸ்ரீராம் டிரான்ஸ்போா்ட் ஃபைனான்ஸ், டாடா கேப்பிடல் உள்ளிட்ட வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மற்றும் ஆறு தனியாா் துறை வங்கிகளின் தலைமைச் செயல் அதிகாரிகள் உள்ளிட்டோா் இந்தப் பேச்சுவாா்த்தையில் கலந்து கொள்ளவுள்ளனா்.

கரோனா பேரிடரிலிருந்து மீண்டு வரும் பொருளாதாரத்துக்குப் புத்துயிா் அளிக்கும் உற்பத்தித் துறைகளுக்கு கடன் வழங்குவதில் உள்ள சிக்கல்கள் குறித்து இந்தக் கருத்தரங்கில் விரிவாக விவாதிக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →