மும்பையில் 4வது நாளாக முடக்கப்பட்ட பேருந்து சேவை 
இந்தியா

மும்பையில் 4வது நாளாக முடக்கப்பட்ட பேருந்து சேவை

மகாராஷ்டிர மாநில சாலைப் போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக, மும்பையில் உள்ள அனைத்து 250 பேருந்து பணிமனைகளும் வெள்ளிக்கிழமையும் மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

DIN


மும்பை: மகாராஷ்டிர மாநில சாலைப் போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக, மும்பையில் உள்ள அனைத்து 250 பேருந்து பணிமனைகளும் வெள்ளிக்கிழமையும் மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சில பணிமனைகளின் தொழிற்சாலைகளில் மட்டும் தொழிலாளர்கள் வேலையை தொடங்கியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசு நிர்வாகத்துடன் மகாராஷ்டிர சாலைப் போக்குவரத்துக் கழகத்தை இணைக்க வலியுறுத்தி, தொழிலாளர்கள் நடத்தி வரும் காலவரையற்றப் போராட்டம் காரணமாக நான்காவது நாளாக மும்பையில் பேருந்து போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது.

இந்த நிலையில், பணிக்குத் திரும்ப விரும்பும் தொழிலாளர்களுக்கு முழுப் பாதுகாப்பு வழங்கப்படும் என்று வியாழக்கிழமை மகாராஷ்டிர போக்குவரத்துத் துறை அமைச்சர் அனில் பாராப் தெரிவித்திருந்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT