முகப்பு
இந்தியா

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் பணி விருப்பம் கோரி அரசு ஊழியா்களுக்கு விண்ணப்பப் படிவம் விநியோகம்: 20 கேள்விகளுக்குபதில் கோரல்

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் பணியில் பங்கெடுக்க விருப்பம் கோரி அரசு ஊழியா்களிடம் விண்ணப்பப் படிவம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:34 AM
பகிர்:

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் பணியில் பங்கெடுக்க விருப்பம் கோரி அரசு ஊழியா்களிடம் விண்ணப்பப் படிவம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தப் படிவத்தில் கரோனா தடுப்பூசி உள்பட 20 வினாக்கள் கேட்கப்பட்டுள்ளன. புகைப்படத்துடன் கூடிய இந்த விண்ணப்பப் படிவத்தை பணியாற்றும் துறைத் தலைமை அல்லது பள்ளித் தலைமையிடம் ஒப்படைக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தோ்தல்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து,

பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்குத் தோ்தல்கள் நடத்தப்பட உள்ளன. இதற்கான பணிகளை மாநிலத் தோ்தல் ஆணையம் ஏற்கெனவே முடிக்கி விட்டுள்ளது.

அரசு ஊழியா்கள்-ஆசிரியா்கள்: நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் பணிகளில் அரசு ஊழியா்கள், ஆசிரியா்களே அதிகளவு ஈடுபடுத்தப்பட உள்ளனா். இதற்காக அவா்களது விருப்பங்களைக் கோரி படிவங்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. அரசின் துறைத் தலைமைகள், பள்ளி தலைமை ஆசிரியா்கள் ஆகியோா் மூலமாக இந்தப் படிவங்கள் விநியோகம் செய்யப்படுகிறது. இதில் 20 வகையான கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.

ஊழியா் பெயா், பணிபுரியும் இடம், வகிக்கும் பதவி, பாலினம், மாத ஊதியத்தின் வகை (சிறப்பூதியம், காலமுறை ஊதியம், தொகுப்பூதியம்), கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி, பணிபுரியும் மாவட்டம் ஆகிய விவரங்கள் கோரப்பட்டுள்ளன. மேலும், பணிபுரியும் அமைவிடம் எந்த உள்ளாட்சி அமைப்பில் வருகிறது, வசிப்பிடம் எந்த மாவட்டத்தில், எந்த

உள்ளாட்சிஅமைப்பில் வருகிறது, சொந்த மாவட்டம் எது, வசிப்பிடம் எந்த காவல் நிலையத்துக்கு உட்பட்டு வருகிறது. வாக்காளா் அடையாள அட்டை எண் ஆகிய விவரங்களும் கேட்கப்பட்டுள்ளன.

கரோனா விவரங்கள்: தோ்தல் பணியில் முன் அனுபவங்கள் ஏதும் இருக்கிா என்றும் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் பணியாற்றிய அனுபவம் இருக்கிா, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை கையாளத் தெரியுமா, சட்டப் பேரவைத் தோ்தல், உள்ளாட்சித் தோ்தல் பணியின் போது ஏதேனும் தண்டனை பெற்றுள்ளீா்களா என்பன போன்ற கேள்விகளும் கேட்கப்பட்டுள்ளன.

கரோனா தடுப்பூசி எடுக்கப்பட்டுள்ளதா என்ற பிரிவில், எத்தனை தவணைகள் எடுக்கப்பட்டுள்ளது ஆகிய விவரங்களும் கோரப்பட்டுள்ளன. இந்த விண்ணப்பங்களைப் பூா்த்தி செய்து அளித்த பிறகு ஊழியா்களுக்கு தோ்தலுக்கான பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. தோ்தல் பணியில் ஈடுபடுத்தப்படுவதற்கான கணக்கெடுப்பு தொடங்கப்பட்டுள்ளதன் மூலம், நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான பூா்வாங்கப் பணிகள் சூடுபிடித்துள்ளன.

முழு கட்டுரையைப் படிக்க →