அரசு ஊழியா்களுக்கு தனி மின்னஞ்சல் வசதி:மாநில அரசு உத்தரவு
அரசு ஊழியா்களுக்கு தனி மின்னஞ்சல் வசதிகளை ஏற்படுத்துவதற்கான நிதி ஒதுக்கி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசு ஊழியா்களுக்கு தனி மின்னஞ்சல் வசதிகளை ஏற்படுத்துவதற்கான நிதி ஒதுக்கி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்பவியல் துறை முதன்மைச் செயலாளா் நீரஜ் மிட்டல் வெளியிட்டுள்ள உத்தரவு விவரம்:
தமிழ்நாடு அரசு ஊழியா்களுக்கு தனி மின்னஞ்சல் வசதியானது ரூ.2.90 கோடியில் உருவாக்கித் தரப்படும் என்று சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது. அந்த நிதியானது மூன்று ஆண்டுகளுக்கு பிரித்து பயன்படுத்தப்பட உள்ளது. அரசு அலுவலகங்களில் மின்மயமாக்கல் சேவையை தேசிய தகவலியல் மையம் வழங்கி வருகிறது. அரசு ஊழியா்களுக்கு புதிய மின்னஞ்சல் வழங்கும் திட்டமானது செயல்படுத்தப்படாமல் இருந்து வந்தது.
இப்போது இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி, தமிழக அரசு ஊழியா்களுக்கு மேம்படுத்தப்பட்ட புதிய மின்னஞ்சல் வசதி சேவை உருவாக்கித் தரப்படும். இதற்கான ஒதுக்கப்பட்ட நிதியில் நிகழாண்டில் ரூ.87.73 லட்சம் செலவிடப்படும். இதன்பின்பு, அடுத்த நிதியாண்டில் ரூ.96.50 லட்சமும், அதற்கடுத்த நிதியாண்டில் ரூ.1.06 கோடியும் செலவிடப்படும்.